டிசம்பர் மாதம் 27, 28 உள்ளாட்சித் தேர்தல்?

 

டிசம்பர் மாதம் 27, 28 உள்ளாட்சித் தேர்தல்?

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தன. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. அதன் படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

Election

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெரும் தேதிகளை அறிவித்துவிட்டன. அனைத்து கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. 

Election commission

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27, 28 உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வசதியாக இருக்க வரும்  டிசம்பர் மாதம் 23 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வை நடத்தி முடிக்கும் படி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.