டிக் டோக் வீடியோ எடுத்த மருத்துவ மாணவர்கள்: நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

 

டிக் டோக்  வீடியோ எடுத்த மருத்துவ மாணவர்கள்: நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் பிசியோதெரபி பிரிவில் மருத்துவர்கள் இருவர் சினிமா பாடலுக்கு  டிக் டோக்  வீடியோ எடுத்துள்ளனர்.

ஹைதராபாத்: அரசு மருத்துவமனையில் டிக் டோக்  எடுத்த பயிற்சி மருத்துவர்கள் இருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

hospital

ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் பிசியோதெரபி பிரிவில் மருத்துவர்கள் இருவர் சினிமா பாடலுக்கு  டிக் டோக்  வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மருத்துவர்கள் இல்லை என்றும்  அத்தாப்பூரில் உள்ள தனியார் பேரா மருத்துவ  கல்லூரியைச் சேர்ந்த வீனாகுமாரி மற்றும் ராம் நகரில் உள்ள தனியார் பேரா மருத்துவ கல்லூரியில் படிக்கக்கூடிய ஜான் மில்டன் என்ற மாணவர் என்பது தெரிய வந்தது. 

tiktok

இவர்கள் இருவரும் காந்தி மருத்துவமனையில் உள்ள பிசியோதெரபி பிரிவில் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.பயிற்சி நேரங்களில் இருவரும் டிக் டோக்  வீடியோ எடுத்து வந்துள்ளனர். இதையடுத்து மாணவர்களை சஸ்பெண்ட் செய்த மருத்துவமனை நிர்வாகம், இதுகுறித்து விளக்கம் கேட்டு  பிசியோதெரபி பிரிவிற்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.