டிக் டோக் மோகம்: 16 வயதில் அப்பாவான சிறுவன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

டிக் டோக் மோகம்: 16 வயதில் அப்பாவான சிறுவன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

தேனியைச் சேர்ந்த  சிறுவன் ஒருவன் சென்னையில் உள்ள தொழில்பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான்.  

சென்னை: டிக் டோக்  வீடியோவால் ஏற்பட்ட பழக்கத்தில் சிறுவன் ஒருவன் செவிலியருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள தொழில்பயிற்சி மையத்தில் தேனியைச் சேர்ந்த  16 வயதான சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான்.  அவனுடைய தந்தை  துபாயில் பணிபுரிந்து வந்துள்ளார். சிறுவனுக்கு டிக் டோக்  செயலின் மீது மோகம் அதிகம் இருந்துள்ளது. இதனால் அவன் டிக் டோக்  வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வந்துள்ளார். 

tiktok

இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம்  சிறுவன் மயமானதாக தெரிகிறது. இதனால் துபாயிலிருந்து நாடு திரும்பிய சிறுவனின் தந்தை சிறுவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் பத்து மாதங்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியாததால்,அவரது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல்  செய்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற  உத்தரவை அடுத்து போலீசார்  சிறுவனின் செல்போன் ரகசிய எண்ணை வைத்து அவன் ஊத்துக்குளியில்  இருப்பதை  கண்டுபிடித்துள்ளனர். 

pregnant

ஊத்துகுளிக்கு  விரைந்த போது, பெற்றோர் மட்டுமல்லாது போலீசாருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சிறுவன் செவிலியர் ஒருவரோடு குடும்பம் நடத்தி குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. அதில்,  ‘டிக் டோக்  மூலம் செவிலியரும், சிறுவனும் நட்பாக பழக ஆரம்பித்து பின்பு காதலிக்க தொடங்கியுள்ளனர்.  இதனால் சிறுவனுடன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி ஊத்துக்குளியில்  குடும்பம் நடத்தியுள்ளார். இதில் இருவரும் கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ஆண்  குழந்தை பிறந்துள்ளது’ தெரியவந்தது.

இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  செவிலியர் மீது  ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் குழந்தையின் எதிர்காலத்துக்காக அந்த சிறுவனின் பெற்றோர் 5 லட்சம் கட்டவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.