டிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்!

 

டிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்!

டிக் டோக் செயலிக்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:  டிக் டோக் செயலிக்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிக் டோக் ஆப்பில்  பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது. பாடல்களுக்கு ஏற்ப வாயசைப்பது, நடனம் ஆடுவது, குறிப்பிட்ட வசனத்தைப் பேசுவது  என இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக் டோக்  ஆப்பில்  நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில்,  பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, டிக் டோக்கிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

tik tok

பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை கொள்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டோக்  செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டோக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

madurai hc

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, டிக் டோக் செயலியை தரவிறக்கம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதனிடையே, டிக் டோக்  செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டிக் டோக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் டிக் டோக் செயலியை  பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து நீக்குமாறும் வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தது. 

s

இந்நிலையில் டிக் டோக் வழக்கு  இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமலேயே டிக் டோக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.  இதை தொடர்ந்து டிக் டோக்  செயலியின் மீதான தடையை தற்காலிகமாக நீக்கியுள்ள உச்சநீதிமன்றம், டிக் டோக் நிறுவனம் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நாளை மறுநாள் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் டிக் டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இதை வாசிக்க: பொன்பரப்பி பிரச்னை; திமுக பிரமுகர் உயிருக்கு ஆபத்து?!..