டிக் டோக் செயலிக்கு 40 கோடி ரூபாய் அபராதம்: அதிர்ச்சியில் டிக் டோக் நிறுவனம்; காரணம் இது தான்?!

 

டிக் டோக் செயலிக்கு 40 கோடி ரூபாய் அபராதம்: அதிர்ச்சியில் டிக் டோக் நிறுவனம்; காரணம் இது தான்?!

டிக் டோக்  செயலிக்கு  40 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ள சம்பவத்தால் அந்நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்கா: டிக் டோக்  செயலிக்கு  40 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ள சம்பவத்தால் அந்நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டோக் . இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது. பாடல்களுக்கு ஏற்ப வாயசைப்பது, நடனம் ஆடுவது, குறிப்பிட்ட வசனத்தை பேசுவது  என இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக் டோக்  ஆப்பில்  நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில்,  பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, டிக் டோக்கிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

tik tok

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் ரகசியத் தகவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக் டோக்  செயலி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம், டிக் டோக்  செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

tik tok

இது குறித்து கூறியுள்ள டிக் டோக் செயலி, ’13 வயதுக்குட்பட்டவர்களுக்காகப் பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் வசதியோடு புதிய செயலி உருவாக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக டிக் டோக்  செயலியைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் டிக் டோக்  செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.