டிக் டோக்கை தடை செய்தால் எனக்கு தான் மகிழ்ச்சி; என்னை கிண்டல் செய்கிறார்கள்: தமிழிசை ஆதங்கம்!

 

டிக் டோக்கை தடை செய்தால் எனக்கு தான் மகிழ்ச்சி; என்னை கிண்டல் செய்கிறார்கள்: தமிழிசை ஆதங்கம்!

டிக் டோக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: டிக் டோக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டாக். இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது.இதில் சில பாடல்களுக்கு பெண்கள் பலர் ஆபாசமான முறையில் நடனம் ஆடியும், நடித்தும்  வருகின்றனர். மேலும் டிக் டோக் ஆப்பின் மூலம் பாலியல் தொழிலிலும் சிலர் ஈடுபட்டு வந்தனர்.

tik tok

இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில், எம்எல்ஏ தமீமுன் அன்சாரி, ஆபாசமாகவும், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், உள்ள டிக்டாக் செயலிக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், #Bluewhale போன்று #TikTok தடை செய்ய மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

tiktok

டிக் டோக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக அரசின்  முடிவுக்கு தமிழிசை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், ‘டிக் டோக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன்,  அதில் கிண்டல் செய்யக்கூடிய ஆளாக நான்தான் இருக்கிறேன்’ என்றார்.