டிக் டோக்கில் வீடியோவை பதிவிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை கோடியா?

 

டிக் டோக்கில்  வீடியோவை பதிவிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை  கோடியா?

தற்கொலை எண்ணத்துடன் வீடியோக்களை வெளியிடுவோருக்கு கவுன்சிலிங் வழங்க முடிவெடுத்துள்ளதாக டிக் டோக்  நிறுவனம் அறிவித்துள்ளது. 

தற்கொலை எண்ணத்துடன் வீடியோக்களை வெளியிடுவோருக்கு கவுன்சிலிங் வழங்க முடிவெடுத்துள்ளதாக டிக் டோக்  நிறுவனம் அறிவித்துள்ளது. 

tiktok

டிக் டோக் ஆப்பில் பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை கொள்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது எனவும் டிக் டோக்கிற்கு இளைய தலைமுறையினர் அடிமையாகி வருவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் டிக் டோக்  மீது முன் வைக்கப்பட்டது.

sc

டிக் டோக்  மீதான குற்றச்சாட்டு நீதிமன்றம் வரை சென்று பின் இந்நிறுவனம் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் வீடியோக்களை பதிவிடத் தடை விதித்தது. மேலும் விதிகளை மீறிப் பதிவிட்ட  60 லட்சம் வீடியோக்களை அந்நிறுவனம்  நீக்கியது.

tiktok

இந்நிலையில் டிக் டோக்  செயலியைப் பயன்படுத்துவோரை கண்காணிக்கவும், பதிவிடும் வீடியோக்களுக்கு அனுமதி வழங்கவும் 500 பணியாளர்களை வேலைக்கு  அமர்த்தி 24 மணிநேரமும் கண்காணிக்க முடிவெடுத்துள்ளது. மேலும் தற்கொலை எண்ணத்துடன் வீடியோக்களை வெளியிடுவோருக்கு கவுன்சிலிங் வழங்கவும், விரைவில் பயனாளர்களுக்குக் கடவுச் சொல் வழங்கவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

suicide

முன்னதாக இந்தியாவில் டிக் டோக்  செயலியில் வீடியோக்களை பதிவிடுவோர்  12 கோடி பேர் என்று டிக் டோக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.