டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

 

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இந்த செயலியை இளைஞர்கள் மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்

புதுதில்லி: டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இந்த செயலியை இளைஞர்கள் மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த செயலியை பல இளைஞர்கள் தவறான வகையில் பயன்படுத்துகிறார்கள்.

பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை கொள்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

prank show

மேலும், பிராங்க் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கியிய அமர்வு, பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

அத்துடன், டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

supreme court

இதனிடையே, டிக் டாக் செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதையும் வாசிங்க

சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..