டிக் டாக் செயலிக்கான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

 

டிக் டாக் செயலிக்கான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்

மதுரை: டிக் டாக் செயலிக்கான தடையை நிபந்தனைகளுடன் நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இந்த செயலியை இளைஞர்கள் மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த செயலியை பல இளைஞர்கள் தவறான வகையில் பயன்படுத்துகிறார்கள்.

பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை கொள்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

madurai high court

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

supreme court

இதனிடையே, டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை பிளே ஸ்டோர் நீக்கியது. இதனைத் தொடர்ந்து, டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் டிக் டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. அப்போது, தவறான நோக்கத்திலோ அல்லது ஆபாசமாகவோ வீடியோ பதிந்தால் அடுத்த 15 நிமிடங்களில் வீடியோ நீக்கம் செய்யப்படும். ஏற்கனவே, சர்ச்சைக்குரிய சுமார் 6 மில்லியன் வீடியோக்கள் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டிக் டாக் தரப்பில் வாதிடப்பட்டது.

tik tok

இதையடுத்து, சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை டிக் டாக்-கில் வெளியிட கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கம் வீடியோக்களை பதவிறக்கம் செய்யக்கூடாது. சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் டிக் டாக் செயலிக்கான தடையை நீக்கி அதிரடியாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் வாசிங்க

நம்பி வந்த பெண்ணை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்