டிக் டாக்கிலும் தளபதி தான் கிங் எப்படி தெரியுமா?

 

டிக் டாக்கிலும் தளபதி தான் கிங் எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக அறியப்படும் தளபதி விஜய் சமீபகாலமாக சமூக வலைத்தளத்திலும் கிங்காக திகழ்ந்து வருகிறார்.

சென்னை: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக அறியப்படும் தளபதி விஜய் சமீபகாலமாக சமூக வலைத்தளத்திலும் கிங்காக திகழ்ந்து வருகிறார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கினாலும், இப்படம் மற்றும் விஜய் தொடர்பாக ட்விட்டரில் அதிகம் பேசப்பட்டு பிரபலமானது. இந்நிலையில், குழந்தைகள், இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் பயன்படுத்தும் ‘டிக் டாக்’ ஆப்பிலும் விஜய் அசுர சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ள ‘டிக் டாக்’ செயலி மூலம் பயணர்கள் குறைந்த நொடிகளில் லிப்-சிங்குடன் கூடிய வீடியோவில், வித்தியாசமான முக பாவனைகளை காட்டி காமெடி, பாடல், நடனம் என நடித்து பதிவேற்றம் செய்யலாம்.

இந்த செயலியையும் நடிகர் விஜய் ஆக்கிரமித்துள்ளார். டிக் டாக்கில் நடிகர் விஜய்யின் பெயரிலான ஹேஷ்டேக்கை சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். விஜய்யின் இந்த புதுவிதமான சாதனையை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.