டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை!

 

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை!

மியூசிக்கலி என்ற பெயரில் முதலில் அறிமுகமாகி பிரபலமான செயலி தான் டிக்டாக். திரைப்பட வசனங்கள், பாடல்களுக்கு ஏற்ப நடித்து வாயசைத்து பிரபலமானார்கள் பல சாமானியர்கள்.

மியூசிக்கலி என்ற பெயரில் முதலில் அறிமுகமாகி பிரபலமான செயலி தான் டிக்டாக். திரைப்பட வசனங்கள், பாடல்களுக்கு ஏற்ப நடித்து வாயசைத்து பிரபலமானார்கள் பல சாமானியர்கள்.

தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட, நடிக்க  விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஆபாசமான வகையில் அதை பயன்படுத்தத் தொடங்கினர் மக்கள், அந்த விடீயோக்களுக்கு வரும் கமெண்ட்களும் உச்சகட்ட அபாசத்திற்கு செல்லத் தொடங்கின.இதன் காரணமாக, டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுவதும் எழுந்தன. 

டிக்டாக்

இந்நிலையில் அமெரிக்க கடற்படையானது டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. அதாவது அரசினால் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்களில் மட்டும் இந்த தடை அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் தாக்குதல் மூலம் இராணுவத் தகவல்களை டிக்டாக் செயலி திருடுவதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்கா முழுவதும் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.