டிக்டாக் அமெரிக்காவில் நீடிக்குமா… தடை செய்யப்படுமா? ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்

 

டிக்டாக் அமெரிக்காவில் நீடிக்குமா… தடை செய்யப்படுமா? ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்

சீன நாட்டின் பைட் டான்ஸ் நிறுவனத்தில் ஆப் தான் டிக்டாக். இந்த ஆப் போல உலகம் முழுவதும் குறுகிய காலத்தில் பிரபலமான ஆப் வேறு எதையும் சொல்லிவிட முடியாது.

அந்தளவுக்கு உலகளவில் பில்லியன் கணக்கில் மக்கள் டிக்டாக் ஆப்பை டவுண்லோடு செய்திருக்கிறார்கள். டிக்டாக் பிரபலம் எனும் புதிய வகை விஐபிகள் உருவாகி விட்டனர். அவர்களில் பலர் வெள்ளித் திரையில் நடிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

டிக்டாக் அமெரிக்காவில் நீடிக்குமா… தடை செய்யப்படுமா? ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்

இந்தியா – சீனா எல்லை உரசல் தொடர்பான பிரச்சனையால், சீனாவில் 150-க்கும் மேற்பட்ட ஆப்களை இந்திய அரசு தடை செய்தது. அவற்றில் டிக்டாக்-கும் ஒன்று.

அமெரிக்காவிலும் டிக்டாக் ஆப் தடை விதிக்கப்பட்டது. அதற்கு காரணமாக, ஆப் பயனாளர்களின் தகவல்களை சீனா நாட்டின் நிறுவனத்திற்கு தருவதாகக் கூறப்பட்டது. ஆனால், பைட் டான்ஸ் நிறுவனம் கடுமையாக இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. ஆயினும் செப்டம்பர் 20-ம் தேதியோடு அமெரிக்காவில் டிக்டாக் தடை எனும் செய்தி பரவியது. டிக்டாக் தடைக்கு எதிராக அந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

டிக்டாக் அமெரிக்காவில் நீடிக்குமா… தடை செய்யப்படுமா? ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்

இப்படி பரபரப்பான சூழலில் ஆரக்கிள் நிறுவனம் மற்றும் வால்மார்ட் ஆகியவை டிக்டாக் நி்றுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கும் தகவல் வெளியானது. இந்தக் கூட்டணி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவையும் அளித்திருந்தார். இதுதான் இந்த விஷயத்தில் பலருக்கும் பெரிய ஷாக்.

டிக்டாக், வால்மார்ட், ஆர்க்கிள் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து புதிய நிறுவனத்தைத் தொடங்கிச் செயல்படலாம். இதன்மூலம் மற்ற இரு நிறுவனங்கள் மூலம் டிக்டாக் கண்காணிப்புக்குள் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  கூறியுள்ளார்.

டிக்டாக் அமெரிக்காவில் நீடிக்குமா… தடை செய்யப்படுமா? ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்

இதன்மூலம் அமெரிக்காவுக்கு 53 சதவிகித பங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டிக்டாக் சேகரிக்கும் தகவல்கள் பத்திராமாக இருக்கும் என்றும் தெரிகிறது.

இந்த மூன்று நிறுவனங்களின் ஒப்பந்தம் அமெரிக்கத் தேர்தலுக்கு முன்பு முடியும் என்பதால் வேலை வாய்ப்பு இதில் கிடைக்கும். இத்ன்மூலம் அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப்க்கு கூடுதல் ப்ளஸாக அமையும் என்று தெரிகிறது.