டிக்டாக்குக்கு போட்டியாக களமிறங்கிய ஃபேஸ்புக்!

டிக்டாக்குக்கு போட்டியாக களமிறங்கிய ஃபேஸ்புக்!

சோஷியல் மீடியாவில் ஃபேஸ்புக் புரட்சி செய்தது என்றால், டிக்டாக் வேறுவிதமான புரட்சியை செய்தது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலி மூலம் பதிவுகள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. இதனால் பிரபல சோஷியல் மீடியா தளங்கள் கொஞ்சம் ஆடித்தான் போயின. டிக்டாக் செயலிக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் களமிறங்கியது. லாஸ்ஸோ என்ற புதிய செயலியை வடிவமைத்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது ஃபேஸ்புக்.

டிக்டாக் செயலிக்கு போட்டியாக லாஸ்ஸோவை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

lasso-facebook

சோஷியல் மீடியாவில் ஃபேஸ்புக் புரட்சி செய்தது என்றால், டிக்டாக் வேறுவிதமான புரட்சியை செய்தது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலி மூலம் பதிவுகள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. இதனால் பிரபல சோஷியல் மீடியா தளங்கள் கொஞ்சம் ஆடித்தான் போயின. டிக்டாக் செயலிக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் களமிறங்கியது. லாஸ்ஸோ என்ற புதிய செயலியை வடிவமைத்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது ஃபேஸ்புக்.

இதுவரை இந்த ஆப்பை லட்சக்கணக்கான மக்கள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்த செயலியில் மேலும் புதிய வசதிகளைச் சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பை ஃபேஸ்புக் நிறுவனம்தான் வைத்துள்ளது. வாட்ஸ்ஆப், லாஸ்ஸோ உள்ளிட்டவற்றை இணைத்து மிக எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. 
இதற்காக குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் லாஸ்ஸோ செயலியை வழங்கி, அதைப் பயன்படுத்தி என்ன என்ன மேம்படுத்த வேண்டும் என்று கேட்டு ரகசிய சர்வே உள்ளிட்டவற்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அனைத்தும் ஓ.கே ஆனால் விரைவில் லாஸ்ஸோ செயலி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். லாஸ்ஸோவின் வருகை டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது.