டிக்டாக்கில் வைரலாகும் புதிய சேலஞ்ச்! ஆனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல

 

டிக்டாக்கில் வைரலாகும் புதிய சேலஞ்ச்! ஆனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல

மொபைலை திறந்தாலே அனைத்தும் டிக்டாக் மயம்தான். பேஸ்புக்கிலிருந்து யூடுப் வரை எங்கு சென்றாலும் டிக்டாக் விடீயோக்கள் தான் கண்ணில் தென்படுகின்றன. டிக்டாக்கிற்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை பார்த்து அந்த  நிறுவனமே வாயடைத்துப் போயினர். “வேலை இல்லாதவர்களுக்காகத் தான் இந்த செயலியை உருவாக்கினோம்,

மொபைலை திறந்தாலே அனைத்தும் டிக்டாக் மயம்தான். பேஸ்புக்கிலிருந்து யூடுப் வரை எங்கு சென்றாலும் டிக்டாக் விடீயோக்கள் தான் கண்ணில் தென்படுகின்றன. டிக்டாக்கிற்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை பார்த்து அந்த  நிறுவனமே வாயடைத்துப் போயினர். “வேலை இல்லாதவர்களுக்காகத் தான் இந்த செயலியை உருவாக்கினோம், ஆனால் இந்தியாவில் இந்தளவுக்கு மக்கள் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கவில்லை” என்று டிக்டாக்கை கண்டுபிடித்தவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஏகப்பட்ட பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்பதை சூசமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

டிக்டாக்கில் அவ்வப்போது சில சேலஞ்ச்கள் ட்ரெண்ட் ஆகும். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் என சில கிறுக்குத்தனமான செயல்களை செய்து அதை சேலஞ்ச் என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள். அதே போல இப்போது ‘ஸ்குள் பிரேக்கர்’ என்றொரு சேலஞ்ச் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

இந்த ‘ஸ்குள் பிரேக்கர்’ சேலஞ்ச்சில் ஒருவர் குதிக்கும் போது இருவர் அருகில் நின்று குதிப்பவர் காலை தட்டி விடுகின்றனர். குதித்தவர் தடுமாறி கீழே விழுகிறார். உயிருக்கே ஆபத்தாகும் என்பதை உணராமல் பலரும் இந்த  சேலஞ்ச்சை செய்து டிக்டாக்கில் விடுகின்றனர்.

ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் இந்த  சேலஞ்ச்சை நீங்களும் செய்யலாம். ஆனா மண்ட பத்திரம்.