டிக்கெட் போட்டுக்கொடுத்தா குடும்பத்தோடு வரேன்… நித்திக்கு முட்டுக்கொடுத்த எஸ்.வி.சேகரின் ஆசை

டிக்கெட் போட்டுக்கொடுத்தா குடும்பத்தோடு வரேன்… நித்திக்கு முட்டுக்கொடுத்த எஸ்.வி.சேகரின் ஆசை

ஶ்ரீகைலாசா நாட்டுக்கு வந்து செல்ல டிக்கெட் போட்டு கொடுத்தால் குடும்பத்துடன் வந்து தரிசிக்க தயாராக உள்ளதாக நித்தியானந்தாகவுக்கு ஆதரவாக பேசிய எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
பிரபல சாமியார் நித்தியானந்தாவை போலீசார் இந்தியாவில் தேடிக்கொண்டிருக்கும்போது அவர் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ஈக்வடார் நாட்டிலிருந்ததாக கூறப்பட்டது. அங்கே அவர் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, தனி நாடாக அறிவிக்கப் போகிறார், ஐ.நா சபையை அணுகியுள்ளார் என்று எல்லாம் கதைகட்டினார்கள்.

sv sekhar

ஆனால், ஈக்வடார் நாட்டு அரசு இதை மறுத்தது. மேலும், அகதி என்ற போர்வையில் தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என்று நித்தி எழுப்பிய கோரிக்கையையும் நிராகரித்தது. பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் குற்றச்சாட்டு என்று நித்தியானந்தா மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் பல லட்சம் கிறிஸ்தவர்களை இந்துவாக மதம் மாற்றியவர் நித்தியானந்தா. எனவே, அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பலர் ஆதரவு குரலையும் எழுப்பி வருகின்றனர்.
நித்திக்கு ஆதரவாக தற்போது எஸ்.வி.சேகர் குரல் கொடுத்துள்ளார். அதில் தான் காசுக்காக நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பேசவில்லை. இந்துக்களுக்கு என்று கைலாசா என்று ஒரு நாடு அமைந்துவிட்டது. அந்த நாட்டுக்கு வந்து செல்ல நித்தியானந்தா டிக்கெட் எடுத்து கொடுத்தால் நான் என் குடும்பத்துடன் வந்து செல்ல தயார். நித்தியானந்தா அகில இந்திய சன்னியாசிகள் சங்கத் தலைவராக இருக்கிறார். எனவே, அவரை கைது செய்வதற்கான வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார்.

sv

மேலும், அங்கு ஓரினச்சேர்க்கை, முறையற்ற உறவு உள்ளிட்டவளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நித்தியானந்தா கூறியுள்ளாரே என்று கேட்டபோது, அது பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது என்று மழுப்பினார் எஸ்.வி.சேகர்.
இதற்கிடையே நித்தியானந்தாவுக்கு இந்து மதத்திலிருந்து சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கைலாசம் என்ற பெயரை பயன்படுத்தியதற்காகப் பெரிய பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கானந்தா சுவாமிகள் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.