டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! அதுலலாம் தலையிடமுடியாது- முதலமைச்சர் பழனிசாமி

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை! அதுலலாம் தலையிடமுடியாது- முதலமைச்சர் பழனிசாமி

டிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு எனவும் அதில் அரசு தலையிட முடியாது எனவும் இருப்பினும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

பட்ஜெர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஏழை, எளிய மாணவர்கள் லட்சக்கணக்கானோர் செலவு செய்து பயிற்சி மையங்கள் சென்று படித்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 99 பேருக்கு பணிநீக்கத்தோடு வாழ்நாள் முழுவதும் போட்டித்தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்த 16 பேரும் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடக்க உதவியாக இருந்த 42 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு  ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவது வருத்தமாக இருப்பதாகவும் வரும்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமி

இதைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஎன்பி எஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு, அதில் அரசு தலையிடாது என தெரிவித்தார். இருப்பினும் நடைபெற்ற முறைகேடுகளை மறைக்கவில்லை என தெரிவித்த முதல்வர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கமளித்தார்