டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பற்றி ஸ்டாலின் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார் : அமைச்சர் ஜெயக்குமார்

 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பற்றி ஸ்டாலின் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார் : அமைச்சர் ஜெயக்குமார்

உலக மகா யோக்கியர் போலப் பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கி கொடுப்பாரா?”

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்விலேயே முறைகேடு நடந்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால் அது பொய்யான தகவல் என்று கூறி அதிமுக அரசு அதனை மூடி மறைத்து விட்டது. குரூப் 1 தேர்வு முறைகேடு வெளி வர வேண்டும். 

ttn

2017ம் ஆண்டு சென்னை மத்தியக்குற்றப்பிரிவு விசாரித்த அந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்று உலக மகா யோக்கியர் போலப் பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கி கொடுப்பாரா?” என்று குறிப்பிட்டிருந்தார். 

ttn

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ” டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் என்று மு.க ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். அவர் என் மீது குற்றம் சாட்டினால் நான் வழக்கு தொடர்வேன் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து, அவர்கள் யார் என்று சி.பி.சி.ஐ.டி.யிடம் அவர் சொன்னால் உடனே சம்மன் அனுப்பி உண்மை வெளிக்கொணரப்படும் என்றும் அவர் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.