டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்! தமிழக அரசு தேர்விலும் தமிழ் புறக்கணிப்பு!! 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்! தமிழக அரசு தேர்விலும் தமிழ் புறக்கணிப்பு!! 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

சார்பதிவாளர், வருவாய்த்துரை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வில் வெற்றிப்பெற மூன்று நிலைகளை கடக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். மூன்று நிலைகளிலும் வெற்றிப்பெற்றால் தான் அவர்களுக்கு அரசு பணியிடம் கிடைக்கும். இந்த தேர்வை எழுத பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது.

TNPSC

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். முதல் நிலைத்தேவில் மொழித்தாள் இடம்பெறும், அதனை விருப்பமான மொழியைத் தேர்ந்திடுத்துக்கொள்ளலாம். அந்த மொழித்தாள் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் விளக்கம் அளித்துள்ளது.