டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மாற்றங்கள்! இனி குரூப்-2வுக்கு இரு தாள்கள்…

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மாற்றங்கள்! இனி குரூப்-2வுக்கு இரு தாள்கள்…

குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 

குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 

சார்பதிவாளர், வருவாய்த்துரை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வில் வெற்றிப்பெற இரண்டு நிலைகளை கடக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வு மற்றும் நேர்காணல். இரண்டு நிலைகளிலும் வெற்றிப்பெற்றால் தான் அவர்களுக்கு அரசு பணியிடம் கிடைக்கும். இந்த தேர்வை எழுத பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. 

TNPSC

இந்நிலையில்  குரூப்-2  முதல்நிலை தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் 2வது தாள் திருத்தப்படும் என்றும்  பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும். வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முதல் நிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.