டிஎன்பிஎல் தொடரில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை – பிசிசிஐ கமிட்டி அறிக்கை

 

டிஎன்பிஎல் தொடரில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை – பிசிசிஐ கமிட்டி அறிக்கை

டிஎன்பிஎல் தொடரில் முறைகேடு நடந்ததாக பிசிசிஐக்கு வந்த புகாரை விசாரித்த கமிட்டி, எந்தவித சர்ச்சைக்குரிய முறைகேடும் நடக்கவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 20 ஓவர்கள் கொண்ட தமிழ்நாடு பிரீமியர் லீக்கின்  4-வது சீசன் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர்கள் வெளிமாநிலங்களில் இருக்கும் புக்கிஸ்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவர்களுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிசிசிஐக்கு புகார் வந்தது.

டிஎன்பிஎல் தொடரில் முறைகேடு நடந்ததாக பிசிசிஐக்கு வந்த புகாரை விசாரித்த கமிட்டி, எந்தவித சர்ச்சைக்குரிய முறைகேடும் நடக்கவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 20 ஓவர்கள் கொண்ட தமிழ்நாடு பிரீமியர் லீக்கின்  4-வது சீசன் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர்கள் வெளிமாநிலங்களில் இருக்கும் புக்கிஸ்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவர்களுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிசிசிஐக்கு புகார் வந்தது. மேலும் அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணியில் இருக்கும் முதல் தர கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் இந்த சூதாட்டமானது மேலும் சில அணி வீரர்களுடனும் பரவி வருவதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. 

bcci

இந்தப் புகார் நேரடியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டது. இதனை தமிழக கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ அனுப்பி வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதனடிப்படையில் தமிழக கிரிக்கெட் சங்கம் 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தி வந்தது. 

விசாரணையின் முடிவில் கமிட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முழு அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை முழுமையாக படித்து பார்த்த பிறகு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி வெளியிட்ட தகவலில், “டிஎன்பிஎல் இல் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என விசாரணையில் ஈடுபட்ட கமிட்டி தெரிவித்திருக்கிறது. அவர்கள் எங்களுக்கு சமர்ப்பித்த அறிக்கையை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து அதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளோம். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நேர்மையான முறையில் நடைபெற்று வருவதாகவும் வீரர்களை எந்த உரிமையாளரும் முறைகேடான செயலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற புகார்கள் இனி வராமல் இருக்க மேலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அதை அடுத்தடுத்த தொடர்களில் பின்பற்றுவோம் என அவர் தெரிவித்தார்.

-vicky