டாஸ்மாக் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணையும் நாளை காலை நடைபெறும்!

 

டாஸ்மாக் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணையும் நாளை காலை நடைபெறும்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை டாஸ்மாக் பின்பற்றவில்லை என்று கூறி டாஸ்மாக்குகளை மூடுமாறு உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக டாஸ்மாக்கை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், உரிய கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் செயல்பட அனுமதி அளித்தது. ஆனால் கடந்த 8 ஆம் தேதி தொடரப்பட்ட அவசர வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை டாஸ்மாக் பின்பற்றவில்லை என்று கூறி டாஸ்மாக்குகளை மூடுமாறு உத்தரவிட்டனர்.

ttn

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர்  எம்.ஜோதிராமன் சார்பில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள டாஸ்மாக் வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அந்த வழக்குகள் அனைத்தும் நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.