டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் இனி நிம்மதியா சரக்கடிக்கலாம்?!..

 

டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் இனி நிம்மதியா சரக்கடிக்கலாம்?!..

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வந்தாலும், டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் செம கடுப்பில் இருந்தார்கள்.

தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. இதனால் சிறு வணிகர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். பெரு வணிகர்கள் மட்டும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை காண முடிந்தது. சிறு வணிகர்கள் துணிப்பை வாங்கி அதற்கு தனியாக கட்டணம் வசூல் செய்து வந்தனர். தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை நடவடிக்கையை பலரும் பாராட்டி வந்தாலும், டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் செம கடுப்பில் இருந்தார்கள்.

xzvzb

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான டாஸ்மாக் பாரில் பேப்பர் கப்புகள் விநியோகிக்கப்பட்டன. அதில் சரக்கை ஊற்றினால், கொஞ்ச நேரத்திலேயே ஊறிப்போய்விடும். வெளியிலும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை தேடிப்பிடிப்பது பெரும்பாடாக இருந்தது. தற்போது மீண்டும் சகஜ நிலை திரும்பியுள்ளது. யூஸ் அண்ட் த்ரோ கப்புகள் எளிதாக கிடைக்கிறது. சில டாஸ்மாக் பார்களிலும் யூஸ் அண்ட் த்ரோ கப்பு வழங்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல் கேரி பேக்குகளும் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வரத் துவங்கியுள்ளது.

czcvv

இதன்மூலம் தமிழக குடிமக்கள் அறிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான், தமிழக அரசாங்கம் பிளாஸ்டிக் தடை விஷயத்தில் அக்கறையுடன் செயல்படவில்லை. பிளாஸ்டிக் தடை என பெயருக்கு அறிவித்துவிட்டு, அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.