டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

 

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என அனுமதியளித்த நீதிமன்றம், உரிய  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் டாஸ்மாக் திறக்கப்பட்ட 2 நாட்களும் கூட்டம் அதிகமாக இருந்தது.  டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற வீடியோக்களும் போட்டோக்களும் சமர்பிக்கப்பட்டதால் டாஸ்மாக்குகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதாக கூறி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை கடந்த 4 நாட்களுக்கு மேலாக விசாரிக்காமல் இழுத்தடித்தனர். 

tasmac

இந்நிலையில் டாஸ்மாக் கடையை திறக்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. நாளை விசாரணைக்கு வரவிருந்த பட்டியலில் டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கு இடம்பெற்றிருக்கிறது.