டாஸ்மாக் வழக்கு… கேவியட் தாக்கல் செய்த தே.மு.தி.க!

டாஸ்மாக் வழக்கு… கேவியட் தாக்கல் செய்த தே.மு.தி.க!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மனுவில் பிழை உள்ளதாக கூறி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து தவறுகள் திருத்தப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தே.மு.தி.க வழக்கு தொடர்ந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மனுவில் பிழை உள்ளதாக கூறி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து தவறுகள் திருத்தப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

vijayakanth-89

இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளும்படியும், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் கேவியட் மனு ஒன்றை தே.மு.தி.க தாக்கல் செய்துள்ளது. மேலும் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

tasmac-tn-89

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தாங்கள்தான் வழக்கைத் தொடர்ந்தோம் என்ற வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விளம்பரம் தேடிக் கொண்டனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தே.மு.தி.க மனு செய்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.