டாஸ்மாக் மூடல் – விரக்தியில் கேரள இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 

டாஸ்மாக் மூடல் – விரக்தியில் கேரள இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கேரளாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இளைஞர் ஒருவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சூர்: கேரளாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இளைஞர் ஒருவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ரெயில், விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் நாடு முழுக்க மூடப்பட்டுள்ளது.

ttn

இந்த நிலையில், கேரளாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இளைஞர் ஒருவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சனோஜ் என்பவர் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மது அருந்த வழியில்லாமல் பெரும் விரக்தியில் இருந்த சனோஜ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலையில் அவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.