டாஸ்மாக் மது என்ன கொரோனா தடுப்பு மருந்தா? கடுப்பான பிரேமலதா விஜயகாந்த்

 

டாஸ்மாக் மது என்ன கொரோனா தடுப்பு மருந்தா? கடுப்பான பிரேமலதா விஜயகாந்த்

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட,  கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ள சென்னை காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் டாஸ்மாக்குகள் தவிர தமிழகத்திலுள்ள மற்ற அனைத்து டாஸ்மாக்குகளும் இன்று திறக்கப்பட்டு விட்டன. மது வாங்குவதற்கு இன்று காலை முதல் குடிமகன்கள் வரிசையில் நின்று மதுவாங்கி செல்கின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

டாஸ்மாக்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  “அரசின் தேவைக்காக மதுக்கடைகளை மூடுவதும் பின்னர் திறப்பது நிச்சயம் பிரச்னையை உண்டாக்கும். தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை இப்போது திறக்க வேண்டிய அவசியம் என்ன ? டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கப்போகிறது.அரசு என்பது மக்களின் நலனில் தான் அக்கறை கொள்ள வேண்டும். டாஸ்மாக் மது என்ன கொரோனா எதிர்ப்பு மருந்தா?” என தெரிவித்தார்.