டாஸ்மாக் தொடர்பான தமிழக அரசின் மனுவில் பிழை.. விசாரிக்க இயலாது- உச்சநீதிமன்றம்

 

டாஸ்மாக் தொடர்பான தமிழக அரசின் மனுவில் பிழை.. விசாரிக்க இயலாது- உச்சநீதிமன்றம்

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என அனுமதியளித்த நீதிமன்றம், உரிய  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் டாஸ்மாக் திறக்கப்பட்ட 2 நாட்களும் கூட்டம் அதிகமாக இருந்தது. 

ttn

இது குறித்து கடந்த 8 ஆம் தேதி எழுந்த அவசர வழக்கில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படாததால் டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற வீடியோக்களும் போட்டோக்களும் சமர்பிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைனில் மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ttn

இந்நிலையில் இன்று தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் மனுவில் பிழை இருக்கிறது, அதனால் இதனை விசாரிக்க இயலாது என்று அறிவித்துள்ளது. மேலும், மனுவில் இருக்கும் பிழையை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்தால் வரும் நாளை விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.