டாஸ்மாக் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை.. நாளை டாஸ்மாக் திறக்க வாய்ப்பு?!

 

டாஸ்மாக் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை.. நாளை டாஸ்மாக் திறக்க வாய்ப்பு?!

அதனை திருத்தி மீண்டும் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அனைத்து டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளும் மூடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டது. ஆனால் அந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் கடந்த 8 ஆம் தேதி மதுக்கடைகளை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ttn

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் பிழை இருப்பதாகவும், அதனை திருத்தி மீண்டும் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதனையடுத்து, மனுவில் திருத்தும் செய்யப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

ttn

அதில், டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 2 நாட்கள் திறக்கப்பட்ட உடனே டாஸ்மாக்குகள் மூடப்பட்டதால், மீண்டும் திறக்கப்படுமா அல்லது திறக்கப்படாதா என்று குடிமகன்கள் காத்துக் கிடக்கும் இந்த சூழலில் நாளை முதல் டாஸ்மாக்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.