‘டாஸ்மாக் தவிர வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 – 5 ஆண்டுகள் ஆகும்’.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

 

‘டாஸ்மாக் தவிர வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 – 5 ஆண்டுகள் ஆகும்’.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

அதனை தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அனைத்து டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளும் மூடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த 7 ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டது. ஆனால் அந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் கடந்த 8 ஆம் தேதி மதுக்கடைகளை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ttn

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மதுக்கடைகளை மூட கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையும் நடைபெற்று வருகிறது. நேற்று டாஸ்மாக் தொடர்பாக எந்த மனுக்களும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அதனை தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. 

ttn

இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று வரும் விசாரணையில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் வரும் திங்கள் கிழமையும் விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அந்த விசாரணையில் தமிழக அரசு தரப்பில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிப்பதாகவும், டாஸ்மாக்கிற்கு பதில் வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க 4 – 5 ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.