டாஸ்மாக் கடையில குவாட்டர் வாங்கினால் இது இலவசம்… ஏமாறாமல் கேட்டு வாங்குங்கள் குடிமகன்களே…!

 

டாஸ்மாக் கடையில குவாட்டர் வாங்கினால் இது இலவசம்… ஏமாறாமல் கேட்டு வாங்குங்கள் குடிமகன்களே…!

பில் மிஷன் வந்தால் டாஸ்மாக்கில் வேலை செய்பவர்களில் பலரும் அதிகாரிகளில் பலரும் வேறு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

தமிழகத்தில் 3,825 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் 1.2 கோடி மது பாட்டில் விற்பனையாகிறது. நடப்பாண்டில், மதுபான விற்பனை 26 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. மதுபான கடைகளில் பில் புத்தகம் மூலமாக, பில் வழங்க  வேண்டும்.

 tasmac

ஆனால், எந்த கடைகளிலும் பில் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, தினமும் கடைகளில் மதுபான விற்பனை முடிந்ததும் ஒட்டுமொத்தமாக பில் போட்டு அதை கடை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு  வழங்கியதுபோல் கணக்கு காட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. காரணம் பில் வழங்கினால் அதில் குறிப்பிடும் தொகையை மட்டும் எல்லா வாடிக்கையாளர்களும் வழங்குவார்கள். கடைக்காரர்களும் கூடுதலாக 5, 10 ரூபாயை கேட்டு  வாங்க முடியாது. இந்த பணத்தில்தான் பலரின் வாழ்க்கையே ஓடுகிறது என்பது நிதர்சனம். tasmac

இந்நிலையில் பில் வழங்காமல் மது பாட்டில் விற்பதால் முறைகேடுகள் நடக்கிறது. இதை தடுக்க பில்லிங் சிஸ்டம் அவசியம் எனக்கருதி, அனைத்து  டாஸ்மாக் கடைகளுக்கும் பில்லிங் மெஷின் வாங்க, கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இதுவரை 12 முறை டெண்டர் விடப்பட்டது. இதற்காக, 12.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி இதுவரை பயன்படுத்தப்படவில்லை. tasmac

பில்லிங்  மெஷின்களும் வந்துசேரவில்லை. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் டாஸ்மாக் அதிகாரிகள் சிலரே இழுத்தடிக்கிறார்கள். பில்லிங் சிஸ்டம் வந்தால் முறைகேடு செய்ய முடியாது. இதன் காரணமாக டாஸ்மாக் நிர்வாகமே, பில்லிங்  சிஸ்டத்திற்கான டெண்டரை இறுதிசெய்யாமல் தாமதம் செய்து வருகிறது. இத்திட்டத்தை கிடப்பில் போட்டு முடிந்தவரை டெக்னிக்காக காய் நகர்த்தி வருகின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள். அப்படி பில் மிஷன் வந்தால் டாஸ்மாக்கில் வேலை  செய்பவர்களில் பலரும் அதிகாரிகளில் பலரும் வேறு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.