டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு!! வீட்டுக்கு முன்னாடி நின்னு கோஷம் போடுங்க – உதய்நிதி ஸ்டாலின்

 

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு!! வீட்டுக்கு முன்னாடி நின்னு கோஷம் போடுங்க – உதய்நிதி ஸ்டாலின்

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின.

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (மே 7)   முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், நாளை முதல் மதுபானம் விலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்றம் டாஸ்மாக் திறக்க தடையில்லை என தெரிவித்துள்ளது 

 

 

இந்நிலையில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்! ” என குறிப்பிட்டுள்ளார்.