டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் – நிதித்துறை செயலர்

 

டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் – நிதித்துறை செயலர்

மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன.

மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2293 டாஸ்மாக் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் தமிழக அரசு முக்கிய வருவாய்களில் ஒன்றாக டாஸ்மாக் வருமானத்தை பார்க்கிறது. படிப்படியாக மதுவிலக்கு என்ற வாக்குறுதி என்ன ஆனது? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

 

டாஸ்மாக்
இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். வரும் ஆண்டு கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் உயரும் என்றும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.