டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

 

டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்குதான் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்குதான் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயினர். மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தமிழகத்தில் ஊரடங்கு தொடங்கிவிட்டது. அதனால், ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் எதிர்கொள்ள டாஸ்மாக் சரக்கு வாங்க முடியாமல் போயினர் தமிழக குடிமக்கள். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கபடாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. 

சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் திடீரென மது அருந்துவதை நிறுத்தியதால் சுவாச பிரச்சினை ஏற்படுவதாகவும், ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட  டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுபிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், திடீரென மது அருந்துவதை நிறுத்தும் போது, இதயத்துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், மூளையை பாதிக்கச் செய்வதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் மதுபான கடைகள்  உடைக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் 22  சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கள்ளச்சந்தையில் மது பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன், அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தனர்.