டாஸ்மாக் கடைகளில் ‘சிசிடிவி கேமரா’ : திருட்டு போவதைத் தடுக்க புதிய நடவடிக்கை!

 

டாஸ்மாக் கடைகளில் ‘சிசிடிவி கேமரா’ : திருட்டு போவதைத் தடுக்க புதிய நடவடிக்கை!

தமிழகம் முழுவதிலும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதிலும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில், மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் தான் அந்த பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். அந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுபானம் விற்பனை செய்வதைத் தடுக்கவும்,  சில நேரங்களில் குறிப்பிடப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கும் கடைகளைக் கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்களை பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

tasmac

டாஸ்மாக்கில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படப் போவது குறித்துப் பேசிய டாஸ்மாக் அதிகாரிகள், “தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், அங்கு நடக்கும் திருட்டுகளை தடுக்க முதல் கட்டமாக 3000 கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக விலையில் விற்பனை செய்வதைக் கண்காணிக்க முடியும். கடைகளில் திருட்டுப்போவதையும் தடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளனர்