டாஸ்மாக் இனி 24/7 திறந்திருக்கப் போகிறது?

 

டாஸ்மாக் இனி 24/7 திறந்திருக்கப் போகிறது?

கடைகள், வங்கிகள் 24 மணி நேரமும் திறந்திருப்பது நல்லதுதானே? இரவு பத்து மணிக்கு மேல் கடைகளை திறந்திருந்தால், இரவு ரோந்து காவலர்களுக்கு இனி எக்ஸ்ட்ராவாக தள்ள வேண்டியிருக்காதே, ஏன் நல்ல விஷயத்திற்கெல்லாம் எதிர்மறையாகவே சிந்திக்கிறீர்கள் என கோபம் வேண்டாம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என பொதுமக்கள் உயிரை குடுத்து போராடினால், எப்பாடுபட்டாவது ஆலை பணிகளை துவக்கும் போல தெரிகிறது. பொன்னு விளையிற பூமிய்யா விட்ருங்கய்யா என காவிரி விவசாயிகள் கெஞ்சினால், ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க‌ லாரிலாரியாக பிரமாண்ட குழாய்கள் வந்து வயலில் இறங்குகின்றன. சேலத்துலேர்ந்து நாங்க சென்னைக்கு 8 மணி நேரத்துல போய்ட்டு வர்றது பெரிய பிரச்னை இல்ல, எங்களுக்கு 8 வழி சாலை எல்லாம் வேண்டாங்க என்றால், உச்சநீதிமன்றம் போய் சாலைக்கு ஆதரவாக அரசு மனு தாக்கல் செய்கிறது. டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக நீக்காவிட்டாலும், எண்ணிக்கையையாவது குறைக்கலாமே என்றால், 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக பேச்சு.

தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள், மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான வரைவு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவெங்கும் இதற்கான அனுமதி அளித்து மத்திய அரசு சட்டம் இயற்றியதை அடுத்து, முதல் மாநிலமாக‌ மராட்டிய அரசு 2018ஆம் ஆண்டு அம்மாநிலமெங்கும் 24 மணி நேர அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் அனைத்து கடைகளையும், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்குட்பட்டு, திறப்பதற்கான அனுமதி விரைவில் தரப்படும் என தெரிகிறது.

Shops Open 24/7

கடைகள், வங்கிகள் 24 மணி நேரமும் திறந்திருப்பது நல்லதுதானே? இரவு பத்து மணிக்கு மேல் கடைகளை திறந்திருந்தால், இரவு ரோந்து காவலர்களுக்கு இனி எக்ஸ்ட்ராவாக தள்ள வேண்டியிருக்காதே, ஏன் நல்ல விஷயத்திற்கெல்லாம் எதிர்மறையாகவே சிந்திக்கிறீர்கள் என கோபம் வேண்டாம். கசப்பு மருந்தை இனிப்பு தடவி குழந்தைகளுக்கு ஊட்டுவதுபோல, இந்த செய்தியை முதன்மைப்படுத்தி டாஸ்மாக்கை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான இழிசெயலும் நடந்துவிடுமோ என்ற பயம்தான். எக்காரணத்தை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையோ, அவை திறந்திருக்கும் நேரமோ அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அரசு அளிக்கும்பட்சத்தில் இந்த முடிவை வரவேற்கிறோம். உத்தரவாதம் தருமா அரசு?