டாஸ்மாக்குக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்.. மதுக்கடை மூடல்!

 

டாஸ்மாக்குக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்.. மதுக்கடை மூடல்!

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று டாஸ்மாக் திறக்கப்படவில்லையாம். 

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுந்தமாவடி என்னும் கிராமத்தில் டாஸ்மாக் இருக்கிறது. அந்த டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதனிடையே ஊரடங்கால் பூட்டப் பட்டிருந்த டாஸ்மாக் கடந்த 7 ஆம் தேதியன்று திறக்கப்படவிருந்தது. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று டாஸ்மாக் திறக்கப்படவில்லையாம். 

ttn

அதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் மீண்டும் அந்த டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊர்மக்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த மதுக்கடைக்கு யாரும் செல்லக்கூடாது என்று தீர்மானித்து, யாரும் மது வாங்க செல்லவில்லையாம். இதனால் நேற்றும், நேற்று முன்தினமும்  டாஸ்மாக் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த  கிராம மக்கள், டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கு வந்த டாஸ்மாக் மண்டல மேலாளர் அம்பிகாபதி டாஸ்மாக்கை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டார். மேலும், நிரந்தரமாக மூடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.