டாஸ்க் என்ற பெயரில் ரசிகர்களைக் கடுப்பு ஏத்தும் பிக் பாஸ்!

 

டாஸ்க் என்ற பெயரில் ரசிகர்களைக் கடுப்பு ஏத்தும் பிக் பாஸ்!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷெரின் மற்றும் தர்ஷன் இணைந்து ஒரு டாஸ்க் செய்வது போல் காட்டப்பட்டுள்ளது. அந்த புரோமோவில்,தர்ஷன் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் கச்சிதமாகச் செய்கிறார். 

ஆனால் ஷெரீனுக்கு தமிழ் பேச தெரியாத காரணத்தினால் சற்று தடுமாற்றம் அடைவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட ரசிகர்கள், ‘டாஸ்க் என்ற பெயரில் ஏன் இப்படி கடுப்பு ஏத்துகிறீர்கள்’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.