டாஸ்க்கில் மயங்கி விழுந்த சேரன்! பதற்றத்தில் ஹவுஸ் மேட்ஸ்! 

 

டாஸ்க்கில் மயங்கி விழுந்த சேரன்! பதற்றத்தில் ஹவுஸ் மேட்ஸ்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 45வது நாளாய் எட்டியுள்ளது. போடியார்களுக்கு இடையே பொறாமை, அழுகை, சோகம், சந்தோஷம் என்று அனைத்தையும் பார்த்து விட்டோம். ஆனால் அவர்கள் போட்டியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தான் நமக்கு இன்னும் தெரியவேயில்லை. ஏனென்றால் கடந்த இரண்டு முறையை விட இந்த முறை டாஸ்க் சற்று குறைவாகக் கொடுத்துள்ளது தான். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் இரு ஜோடிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். கில்லர் காசு என்ற ஒரு காயின் யாரிடம் கடைசியாக உள்ளதோ அந்த ஜோடியின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 50% சதவீதம் குறைக்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்தார். 

அதன்படி அந்த ஜோடிகள் கலர்கலர் உடை அணிந்து ஆட்டத்தை ஆட ஆரம்பித்தனர். அப்போது எதிர்பாரா விதமாகச் சேரன் கீழே விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்த மற்ற ஹவுஸ் மேட்ஸ் அவருக்கு உதவ முன் வந்தது போல் உள்ளது.