டால்பி ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட சோனி ஹெச்.டி-எஸ்20ஆர் சவுண்டுபார் இந்தியாவில் அறிமுகம்

 

டால்பி ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட சோனி ஹெச்.டி-எஸ்20ஆர் சவுண்டுபார் இந்தியாவில் அறிமுகம்

சோனி ஹெச்.டி-எஸ்20ஆர் சவுண்டுபார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

மும்பை: சோனி ஹெச்.டி-எஸ்20ஆர் சவுண்டுபார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் சோனி ஹெச்.டி-எஸ்20ஆர் சவுண்டுபார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு என்ட்ரி-லெவல் ஆடியோ சாதனம் ஆகும். இதன் விலை ரூ.14, 990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் (பிப்.7) இந்த சாதனம் சோனி சென்டர், முக்கியமான எலக்ட்ரானிக் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். இதில் இடம்பெற்றுள்ள 5.1 சரவுண்ட் சவுண்டு தொழில்நுட்பம் மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

dolby

இதன் சிறப்பம்சங்களாக ப்ளூடூத், யு.எஸ்.பி கனெக்டிவிட்டி, ஹெச்.டி.எம்.ஐ போர்ட், சவுண்டு மோட்ஸ், 400வாட்ஸ் பவர், 16 எம்.எம் டிரைவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த சாதனத்தில் மூன்று சேனல் ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சப்-வூபரும் அடங்கும். இவற்றை எளிதில் கனெக்ட் செய்யலாம். இந்திய பயனர்களுக்கு ஏற்ற வகையில் இந்த சவுண்டுபார் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சோனி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.