டாம் ஹாங்ஸ்க்கு கோல்டன் குளோப் வாழ்நாள் சாதனையாளர் விருது!

டாம் ஹாங்ஸ்க்கு கோல்டன் குளோப் வாழ்நாள் சாதனையாளர் விருது!

புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளின் 77-ம் ஆண்டு விழா நேற்று லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்தது.இந்த விருதுகளில் ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக ( HFPA) வழங்கப்படும் சிசில் பி டிமிலி வாழ்நாள் சாதனையாளர் விருது மிகுந்த பெருமைக்கு உரிய விருதாகும்.

tom

கிளியோபாட்ரா, சாம்சன் அண்ட் டிலைலா,டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற மாபெரும் படைப்புகளை தந்த சிசில் பி டிமிலிக்கு 1952-ம் ஆண்டு முதன் முதலில்  இந்த விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் பெயரால் வருடந்தோறும் ஹாலிவுட்டில் பெரும் சாதனைகளை செய்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

tom

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், மார்ட்டின் ஸ்கோர்செஸி, ராபர்ட் டி நீரோ,மோர்கன் ஃபிரீமன், வூடி அலன், ஜியார்ஜ் குளூனி, டென்சில் வாஷிங்டன் ஆகியோர் இந்த விருது பெற்றவர்கள். 1956-ம் ஆண்டு பிறந்த டாம் ஹாங்ஸ் எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சாதித்தவர்.இந்த ஆண்டுக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

forest gump

ஃபாரஸ்ட் கம்ப்,யூ ஹாவ் காட்  எ மெய்ல், காஸ்ட் அவே,கேட்ச் மீ இஃப் யு கேன்,தி டெர்மினல் படங்களின் மூலம் உச்சம் தொட்டவர்.இதில் ஃபாரஸ்ட் கேம்ப் படத்தை ஆமிர் கான் இந்தியில் ரீ மேக் செய்கிறார். அதில் விஜயசேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.