“டாம் லாதம் ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை பறித்து விட்டது!” – முதல் ஒருநாள் போட்டி பற்றி விராட் கோலி

 

“டாம் லாதம் ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை பறித்து விட்டது!” – முதல் ஒருநாள் போட்டி பற்றி விராட் கோலி

நியூசிலாந்து அணியின் டாம் லாதம் ஆட்டம் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை பறித்து விட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியின் டாம் லாதம் ஆட்டம் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை பறித்து விட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் மொத்தமாக வென்றது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் செடன்பார்க் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 348 ரன்கள் ஸ்கோரை நியூசிலாந்து அருமையாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் அந்த அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ராஸ் டெய்லரும் (109 ரன்கள்), டாம் லாதமும் (69 ரன்கள்) பக்கபலமாக இருந்தனர்.

ttn

இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டி தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசுகையில், “நியூசிலாந்து அணியினர் மிகச் சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்திய அணி நிர்ணயித்த 348 ரன்கள் போதுமானது. ஆனால், மிடில் ஓவர்களில் ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாதம் ஆட்டத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக டாம் லாதமின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை பறித்து சென்று விட்டது என்று கருதுகிறேன். இந்திய அணி நன்றாகவே பீல்டிங் செய்தது. ஒரு கேட்சை மிஸ் செய்தோம். ஸ்ரேயாஸ் ஐயரின் சதம் மிகச் சிறப்பாக இருந்தது. கே.எல்.ராகுலும் அற்புதமாக பேட் செய்தார்” என்று கூறினார்.