டாமினிக் டொரேட்டோவின் தம்பி அறிமுகம்…ஹான் ஆச்சர்ய வருகை – பட்டையை கிளப்பிய ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ டிரெய்லர்

 

டாமினிக் டொரேட்டோவின் தம்பி அறிமுகம்…ஹான் ஆச்சர்ய வருகை – பட்டையை கிளப்பிய ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ டிரெய்லர்

உலகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆக்க்ஷன் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படங்கள் ஒரு அக்ஷய பாத்திரமாகும். இந்த தொடரின் படங்களில் திகட்ட, திகட்ட சண்டைக் காட்சிகளும் கார் துரத்தல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். இதுவரை 8 ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்’ பாகங்கள் வெளியாகியுள்ளன. எட்டாவது பாகம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டது. இந்த நிலையில், உலகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஐந்தாவது முறையாக இயக்குநர் ஜஸ்டின் லின் இம்முறையும் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தை இயக்கியுள்ளார்.

வின் டீசல் ஏற்றிருக்கும் கதாபாத்திரமான டாமினிக் டொரேட்டோவின் தம்பியாக இந்தப் படத்தில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சேனா ஜேக்கப் என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் ஏற்கனவே இறந்து விட்டதாக கருதப்பட்ட ஹான் லூ இந்தப் படத்தில் மீண்டும் திரும்பியிருப்பது ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் இந்தப் படத்தின் டிரெய்லர் 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. வருகிற மே 22-ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுக்க திரைக்கு வெளியாகிறது. தமிழிலும் இந்தப் படத்துக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருப்பதால் இந்த டிரெய்லரின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்காக அவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.