டாப் 3 காலி.. உணவு இடைவேளைக்கு முன் தடுமாறும் இந்தியா!

டாப் 3 காலி.. உணவு இடைவேளைக்கு முன் தடுமாறும் இந்தியா!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, உணவு இடைவேளைக்கு முன்பாக தடுமாறியது இந்திய அணி.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று வழக்கம்போல பேட்டிங்கை தேர்வு செய்தார். 

india

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களம் இறங்கினர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறிய ரோகித் சர்மா, இம்முறை நிலைத்து ஆடினார். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால் இம்முறை மிகவும் தடுமாற்றத்துடன் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு எதிர்கொண்டார். அவர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த புஜாராவும் தென்னாபிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி, ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த கேப்டன் விராட் கோலி களம் இறங்கியவுடன் ஓரிரு பவுண்டரிகளை அடித்தாலும், நார்ஜேவின் பந்தில் 12 ரன்களுக்குவெளியேற, மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி மிகவும் தடுமாறியது. 

rabada

உணவு இடைவேளையின் போது, இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 38 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

தென் ஆப்ரிக்கா சார்பில் நட்சத்திர பந்துவீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டுகளையும், நார்ஜெ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

-vicky