டாப் 3 அசத்தல்.. இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு!

 

டாப் 3 அசத்தல்.. இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய 340 ரன்கள் குவித்தது இந்திய அணி.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

dhawan

இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் முதல் போட்டியை போலல்லாமல் நிலைத்து ஆடி நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா துரதிஸ்டவசமாக 44 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது.

virat

இம்முறை மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி தவானுடன் ஜோடி சேர்ந்து அணிக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் கடந்த ஷிகர் தவான் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, சுலபமான பந்தில் ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 

தவான் 90 பந்துகளில் 94 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. மிகச் சிறப்பாக ஆடி வந்த விராட் கோலியும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பொது, சிக்ஸர் அடிக்க முயற்சிக்கையில் கேட்ச் பிடிபட்டு 78 ரன்களுக்கு வெளியேறினார்.

kl rahul

துவக்க வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல் ஐந்தாவது வீரராக களமிறங்கி, ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். இவர் 52 பந்துகளில் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஜடேஜா 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

jadeja

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஷாம்பா 3 விக்கெட்டுகளும், ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.