டாப் ஸ்பீடு 85 கி.மீ…இந்திய சந்தையில் கலக்கும் ரிவோல்ட் ஆர்.வி400 – ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ பயணிக்கலாம்!

 

டாப் ஸ்பீடு 85 கி.மீ…இந்திய சந்தையில் கலக்கும் ரிவோல்ட் ஆர்.வி400 – ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ பயணிக்கலாம்!

இந்திய சந்தையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் ரிவோல்ட் ஆர்.வி400 எலக்ட்ரிக் பைக் அறிமுகம் ஆகியுள்ளது.

டெல்லி: இந்திய சந்தையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் ரிவோல்ட் ஆர்.வி400 எலக்ட்ரிக் பைக் அறிமுகம் ஆகியுள்ளது.

இந்தியாவில் ஏராளமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் எலக்ட்ரிக் பைக்? இது கொஞ்சம் புதியதாக இருக்கிறது இல்லையா! ஆனால், ரில்வோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதற்கு பதில் வைத்திருக்கிறது. ஆம். இந்திய சந்தையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் ரிவோல்ட் ஆர்.வி400 என்ற எலக்ட்ரிக் பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் என்ற பெருமையை இந்த இருசக்கர வாகனம் தட்டிச் சென்றுள்ளது.

ttn

எக்கோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் என மூன்று விதமான ரைடிங் அனுபவத்தை இந்த பைக்கில் நாம் பெறலாம். அதிகபட்சமாக ஸ்போர்ட்ஸ் ரைடிங் ஆப்ஷனில் இந்த பைக் 85 கி.மீ டாப் ஸ்பீடை எட்டுகிறது. அதேபோல அதிகபட்சமாக எக்கோ மோடில் பயணிக்கும்போது சுமார் 150 கி.மீ வரை நம்மால் பயணிக்க முடியும். நார்மல் மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கி.மீ மற்றும் சுமார் 100 கி.மீ வரை பயணிக்க முடிகிறது.

ttn

இந்த பைக்குக்கு என்றே ‘மைரிவோல்ட் ஆப்’ என்ற மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிவோல்ட் ஆர்.வி400 பைக்கின் உரிமையாளர்கள் அந்த ஆப் மூலமாக ரைடிங் ஹிஸ்டரி, பேட்டரி ஸ்டேட்டஸ், லோகேட்டர் போன்ற வசதிகளை இயக்க முடியும். மற்ற பைக்குகளுக்கு கொஞ்சம் சளைக்காத வகையில் இந்த எலக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும்போது பலரது கவனத்தையும் ரிவோல்ட் ஆர்.வி400 தன்பக்கம் ஈர்க்கிறது.

இந்த பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், காம்பி பிரேக் அமைப்பு, எல்.இ.டி ஹெட்லைட்-டெய்ல்லைட்-இண்டிகேட்டர், 108 கிலோ எடை, லித்தியம் அயன் பேட்டரி, மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன், அப்சைடு டவுன் முன்பக்க ஃபோர்க், பின்பக்கம் அகலமான டயர் சைஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. நான்கரை மணி நேரத்தில் இந்த பைக் முழுவதுமாக சார்ஜ் ஆகி விடுகிறது. கருப்பு மற்றும் சிகப்பு நிறங்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட் ஆன்ரோடு விலை சுமார் ரூ.1.38 லட்சமாகவும், பிரீமியம் வேரியன்ட் ஆன்ரோடு விலை சுமார் ரூ.1.57 லட்சமாகவும் விற்கப்படுகிறது. சென்னையில் வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் அண்ணா நகரில் ரிவோல்ட் ஷோரூம்கள் அமைந்துள்ளன. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ரிவோல்ட் ஆர்.வி400 பைக் இந்திய வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் ஒரு சிறந்த சாய்ஸ் என்று கூறலாம்!