டாட்டா மோட்டார்ஸின் இயற்கை எரிவாயுவில் இயங்கும் முதல் பேருந்து… சிறப்பம்சங்கள் என்னென்னெ?

டாட்டா மோட்டார்ஸின் இயற்கை எரிவாயுவில் இயங்கும் முதல் பேருந்து… சிறப்பம்சங்கள் என்னென்னெ?

டாடா மோட்டார்ஸால் உருவாக்கப்பட்ட ஸ்டார்பஸ் எல்.என்.ஜி இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த எல்.என்.ஜி அமைப்பில் இயங்கும் முதல் பயணிகள் வாகனம் ஆகும். எல்.என்.ஜி பேருந்துகளின் எரிபொருள் கொள்ளளவு திறன் சி.என்.ஜி.யை விட 2.5 மடங்கு அதிகமாகும், மேலும் ஒரு முறை டேங்க் புல் செய்தால் 600-700 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

டாடா மோட்டார்ஸ் நாட்டின் முதல் திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் (எல்.என்.ஜி) பஸ்ஸை  தயாரித்து டெலிவரி  செய்துள்ளது. 36 சீட்கள் கொண்ட ஸ்டார்பஸ் எல்.என்.ஜி ஏசி மாடல்களின் இரண்டு யூனிட்டுகள், குஜராத்தின் தஹேஜில் உள்ள எல்.என்.ஜி பெட்ரோனெட்டிற்கும், கேரளாவின் கொச்சியில் இரண்டு யூனிட்டுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

lng-bus-78

கடந்த மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலில் இந்த எல்.என்.ஜி பஸ் காட்சிப்படுத்தப்பட்டது. வழக்கமான எரிபொருளுடன் ஒப்பிடுகையில் சுற்றுசூழலை பாதிக்கும்  வாயுக்கள் வெளியேற்றத்தை 30% குறைக்கிறது.

டாடா மோட்டார்ஸால் உருவாக்கப்பட்ட ஸ்டார்பஸ் எல்.என்.ஜி இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த எல்.என்.ஜி அமைப்பில் இயங்கும் முதல் பயணிகள் வாகனம் ஆகும். எல்.என்.ஜி பேருந்துகளின் எரிபொருள் கொள்ளளவு திறன் சி.என்.ஜி.யை விட 2.5 மடங்கு அதிகமாகும், மேலும் ஒரு முறை டேங்க் புல் செய்தால் 600-700 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

first-lng

ஸ்டார்பஸ் எல்.என்.ஜி  பாதுகாப்பான, மலிவு மற்றும் வசதியான எளிய மக்களும் பயன்படுத்துவதாக இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. “நாங்கள் போக்குவரத்துக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளோம். குறைந்த கார்பன் எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் எல்.என்.ஜி பெட்ரோனெட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம். நம்பகமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு பொது போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும், அதே வேளையில், நிலையான பொதுப் போக்குவரத்து குறித்த நமது ஆழமான புரிதல், இந்த போட்டித் துறையில் சிறந்து விளங்கவும் வழிவகுத்ததுள்ளது” என்று டாடா மோட்டார்ஸ் ப்ரொடக்ஷன் லைன் துணைத் தலைவர் ரோஹித் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

lng-67

எல்.என்.ஜி பேருந்துகள் குறைவான எடையை கொண்டது, இதனால் மேம்பட்ட அளவிலான வசதிகளை மிகக்குறைந்த விலையிலே பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் இவை ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவை கணிசமாகக் குறைக்கின்றன. பயணிகளின் வசதியை மேம்படுத்தும், ஸ்டார்பஸ் எல்.என்.ஜி சிறந்த என்விஹெச் அளவை வழங்குகிறது. எல்.என்.ஜி அமைப்பு குறைந்த பிரஷரில் இயங்குவதால் விரைவாக ஆவியாகிறது – இதனால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே இந்த பஸ்கள் மிகவும் பாதுகாப்பான பயணத்தைவழங்கக் கூடியவை