டாக்டர் விஜயபாஸ்கரை முதல்வர் ஆக்குவீங்களா… எடப்பாடியை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

டாக்டர் விஜயபாஸ்கரை முதல்வர் ஆக்குவீங்களா… எடப்பாடியை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

கொரோனா பற்றி பேச மு.க.ஸ்டாலின் என்ன டாக்டரா என்று எடப்பாடி பழனிசாமி கேட்டது சமூக ஊடகங்களில் மிக அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. அப்படி என்றால் எடப்பாடி பழனிசாமி என்ன டாக்டரா? அவர் பதவியை விட்டு இறங்கி டாக்டர் விஜயபாஸ்கரை முதல்வர் ஆக்குவாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

vijaybaskar-67

தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகள் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்திவந்தார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆலோசனை சொல்ல ஸ்டாலின் என்ன மருத்துவரா?” என்று கேட்டார். இது சமூக ஊடகங்களில் காரசார விவாதத்தை எழுப்பியுள்ளது. ஸ்டாலினை முதல்வரா என்று கேட்ட எடப்பாடி பழனிசாமியே, “நேத்து தமிழ்நாட்டில் மூன்று நாளில் கொரோனாவே இருக்காதுன்னு சொன்னியே, நீ எந்த காலேஜ்ல டாக்டருக்கு படிச்ச” என்று மீம்ஸ் பலவற்றை உருவாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

edappadi-89

ட்விட்டரில் அசோக் என்பவர், “மருத்துவர்கள் மட்டும்தான் ஆலோசனை சொல்லணும்னா மருத்துவர் அல்லாத முதல்வர் எதற்கு பதவியில் இருக்க வேண்டும்? கொரானாவை ஏதோ விருந்தாளியைப் போல் நினைத்து மூணு நாளில் போய்விடும் என உளறும் தற்குறி முதல்வர் எதற்கு? டாக்டர்.விஜயபாஸ்கரை முதல்வர் ஆக்கிவிட்டு எடப்பாடி பதவி விலகலாமே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
அரசியல்வாதிகள் முதல் சாதாரண பொது மக்கள் வரை பலரும் முதல்வரின் டாக்டரா என்ற கருத்துக்கு கொந்தளிப்பான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.