டாக்டர் பட்டத்தை எல்லோரும் மலிவாக வாங்கி கொண்டு இருக்கிறார்கள் – பிரேமலதா விஜயகாந்த் நக்கல்!! 

 

டாக்டர் பட்டத்தை எல்லோரும் மலிவாக வாங்கி கொண்டு இருக்கிறார்கள் – பிரேமலதா விஜயகாந்த் நக்கல்!! 

சாதாரண ஆட்களே டாக்டர் பட்டம் வாங்கும் போது ஒரு முதல்வருக்கும் டாக்டர் பட்டம் தரலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சாதாரண ஆட்களே டாக்டர் பட்டம் வாங்கும் போது ஒரு முதல்வருக்கும் டாக்டர் பட்டம் தரலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சீமானின் பேச்சுகள் ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறானது. இதற்காக சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

premalatha

முதல்வருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “முதல்வருக்கு இதனை கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. டாக்டர் பட்டம் இப்போது மலிவாக எல்லாருக்கும் கிடைக்கிறது. சாதாரண ஆட்களே டாக்டர் பட்டம் வாங்கும் போது ஒரு முதல்வருக்கும் டாக்டர் பட்டம் தரலாம்” என்று தெரிவித்தார்.