‘டாக்டர்’ படத்தின் பஸ்ட்லுக் தனுஷ் படத்தின் காப்பியா? இணையத்தில் வைரலாகும் போஸ்டர்ஸ்!

 

‘டாக்டர்’ படத்தின் பஸ்ட்லுக் தனுஷ் படத்தின் காப்பியா? இணையத்தில் வைரலாகும்  போஸ்டர்ஸ்!

‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு  நம்ம வீட்டுப் பிள்ளை,  இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் வெளியானது. இதை தொடர்ந்து  தற்போது ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.   கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம்,  சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா,  வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். 

 

ttn

ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என ஃபுல் எண்டர்டெயின்மெண்ட்டாக  உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு   கோவாவில் நடந்துமுடிந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

 


இதையடுத்து  சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு  டாக்டர்  படத்தின் ஃபஸ்ட் லுக்  நேற்று வெளியாகியது. கைகளில் ரத்தக் கறை,  சுற்றிலும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட பொருட்கள் என நாற்காலியில் சிவகார்த்திகேயன் அமைந்திருக்கும் படியாக அந்த போஸ்டர்  உள்ளது. 

ttn

இந்நிலையில்டாக்டர் படத்தின்  ஃபஸ்ட்  லுக் போஸ்டர்  ஏற்கனவே தனுஷ் நடிப்பில் டாக்டர்ஸ் என்ற பெயரில் உருவாக இருந்த திரைப்பட போஸ்டரின்  காப்பி  என கூறப்படுகிறது. அதில் டாக்டர்ஸ் என்ற வார்த்தையில் உள்ள ஸ் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு டாக்டர் என மாற்றியுள்ளதாக தனுஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

‘டாக்டர்’ படத்தின் பஸ்ட்லுக் தனுஷ் படத்தின் காப்பியா? இணையத்தில் வைரலாகும்  போஸ்டர்ஸ்!

அதேபோல் போஸ்டரை சுற்றிலும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது  ஹாலிவுட் படமான  நைவ்ஸ் அவுட் என்ற படத்திலிருந்து  இருந்து சுடப்பட்டது என நெட்டிசன்கள்  கூறிவருகிறார்கள். மேலும் காப்பி  அடிப்பதில் அட்லீயையே மிஞ்சிட்டீங்க பாஸு  என்று விமர்சித்து வருகிறார்கள்.