டாக்டர் என்று கூறி ரோமியோ போல் வலம் வந்த மோசடி ஆசாமி: திருமண வரவேற்பில் கையும் களவுமாக சிக்கியது எப்படி?

 

டாக்டர் என்று கூறி ரோமியோ போல் வலம் வந்த மோசடி ஆசாமி: திருமண வரவேற்பில் கையும்  களவுமாக சிக்கியது எப்படி?

கல்லூரியில் படித்தவர்களின் பழக்கம், கார், ஹீரோ போன்ற தோற்றம் இதையெல்லாம் வைத்து பெண் வீட்டாரை ஏமாற்றியுள்ளார்.

சென்னை:  மருத்துவர் என்று கூறிக்கொண்டு இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்.  அரசு மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறிய இவருக்கு செவிலியராக பணிபுரியும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு யாரும்  இல்லை என்று கூறிய கார்த்திக்கை  மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்துள்ளனர் அப்பெண்ணின் பெற்றோர். அது மட்டுமில்லாமல் வரதட்சணையாக  75 சவரன் தங்க நகைகளும், 12 லட்சம் ரூபாய் பணமும் தருவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து   கடந்த 11-ஆம் தேதி இவர்களுக்குப் பெண்ணின் பெற்றோர் முன்னிலையில்  திருமணம் நடந்துள்ளது. 

KARTHIK

வரதட்சணை தொகையில் முதற்கட்டமாக பணத்தை வாங்கிக் கொண்ட கார்த்திக், கடந்த12-ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாரானார். ஆனால் ஏற்கனவே 12 லட்சம் வாங்கிக்கொண்ட நிலையில் மீண்டும் பணம் கேட்டு நிர்ப்பந்தித்தது பெண் வீட்டாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் மருத்துவர் அல்ல ஒரு மோசடி பேர்வழி என்பது தெரியவந்தது. 

arrested

கோவையை பூர்வீகமாகக் கொண்ட கார்த்திக் சென்னையில் மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார். ஆனால்  அவர் ஏதோ  பிரச்னை காரணமாகக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்போது கல்லூரியில் படித்தவர்களின் பழக்கம், கார், ஹீரோ போன்ற தோற்றம் இதையெல்லாம் வைத்து பெண் வீட்டாரை ஏமாற்றியுள்ளார். இதை தொடர்ந்து கார்த்திக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.